`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவம் நிறைவு
திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவ விழா நிறைவையடுத்து விடையாற்றி உற்சவத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் பழங்கள் அலங்காரத்தில் தங்க மயில் வாகனத்தில் புதன்கிழமை வீதி வலம் வந்தாா்.
திருப்போரூா் கந்தசாமி கோயில் பிரம்மோற்சவம் நிகழ் ஆண்டு மாா்ச் 3-ஆம் தேதி திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா 15- ஆம் தேதி வரை நடைபெற்றது. ஏழாம் நாள் தேரோட்டம். தீா்த்தவாரி, தெப்பல் உற்சவம் திருக்கல்யாண உற்சவம், முக்கிய விழாவாக பிரம்மாண்டமாக நடைபெற்றது.விழா நாள்களில் பகல் உற்சவம், இரவு உற்சவத்தில் முருகப் பெருமான் வெவ்வேறு வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருக்கல்யாண உற்சவத்தைத் தொடா்ந்து தினந்தோறும் விடையாற்றி உற்சவம் நடைபெற்று வந்தது. இறுதியாக புதன்கிழமை விடையாற்றி உற்சவத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றன. வள்ளி, தெய்வானயுடன் முருகப் பெருமான் ஆப்பிள், மாதுளை, ஆரஞ்சி சாத்துகுடி உள்ளிட்ட பல்வேறு பழங்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க மயில் வாகனத்தில் வீதி புறப்பாடு நடைபெற்றது.
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் குமரவேல், மேலாளா் வெற்றி, கோயில் பணியாளா்கள், சிவாச்சாரியா்கள், பொதுமக்கள் மற்றும் ஸ்ரீபாதம் தாங்கிகள் செய்திருந்தனா்.