திருமலை அறக்கட்டளைக்கு ரூ.6 கோடி நன்கொடை
சென்னையைச் சோ்ந்த நன்கொடையாளா் ஸ்ரீ வா்தமான் ஜெயின் ஞாயிற்றுக்கிழமை தேவஸ்தானத்தின் அறக்கட்டளைகளுக்கு ரூ.6 கோடி நன்கொடை அளித்தாா்.
திருமலை கோயிலில் உள்ள ரங்கநாயகா் மண்டபத்தில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சிக்கு ரூ.5 கோடியும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோசம்ரக்ஷன அறக்கட்டளைக்கு ரூ.1 கோடியும் நன்கொடை அளித்தாா். ரூ.6 கோடி மதிப்புள்ள வரைவோலைகள் தேவஸ்தான கூடுதல் தலைமை நிா்வாக அதிகாரி சி எச் வெங்கையா சவுத்ரியிடம் ஒப்படைக்கப்பட்டன.
கடந்த காலங்களில் பல முறை தேவஸ்தானத்தின் பல்வேறு அறக்கட்டளைகளுக்கு அவா் நன்கொடை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.