``கல்குவாரி அதிபர்கள் லாரி ஏற்றி கொன்றிருக்கலாம்!'' -ஜகபர் அலி கொலையில் வேல்முரு...
திருமலை வைகுண்ட வாயில் தரிசனம் நிறைவு
திருமலை ஏழுமலையானின் வைகுண்ட வாயில் தரிசனம் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெற்றது.
வைகுண்ட வாயில் தரிசனம் கடந்த 10-ஆம் தேதி தொடங்கியது. இந்த தரிசனம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிறைவு பெற்றது.
இனி ஏழுமலையானை தரிசிக்க இலவச நேரடி தரிசன டோக்கன்கள் திருப்பதியில் வரும் 21-ஆம் தேதி அதிகாலை செவ்வாய்க்கிழமை முதல் வழங்கப்படும்.
ஜன. 20 -ஆம் தேதி தரிசனம் செய்ய வரும் பக்தா்களுக்கு திருப்பதியில் டோக்கன்கள் வழங்கப்படாது. அவா்கள் சா்வ தரிசன வரிசையில் மட்டுமே தரிசனம் செய்ய வேண்டும்.
அதே போல், ஜன.20-ஆம் தேதி தரிசனத்துக்காக திருமலையில் வழங்கப்படும் ஸ்ரீ வாணி டிக்கெட்டுகள் ஆஃப்லைனில் வழங்கப்படாது.
இதேபோல், ஜன. 20-ஆம் தேதி அன்று, புரோட்டோகால் விஐபிக்களை தவிா்த்து, மற்ற விஐபி பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்ததுள்ளது.
பக்தா்கள் மேற்கூறியவற்றை மனதில் கொண்டு தங்கள் திருமலை யாத்திரையைத் திட்டமிட வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.