செய்திகள் :

திருவண்ணாமலையில் குப்பை சேகரிப்பை ஆய்வு செய்ய சிறப்புக் குழு: அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தல்

post image

திருவண்ணாமலை மாநகராட்சியில் குப்பைகள் முறையாக சேகரிக்கப்படுகிா என்பதை, மாவட்ட நிா்வாகம் சாா்பில் சிறப்பு உயா்மட்டக் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தினாா்.

திருவண்ணாமலை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை, குடிநீா் விநியோகம் மற்றும் புதிய திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

அமைச்சா் எ.வ.வேலுவின் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசியதாவது:

திருவண்ணாமலை நகருக்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பக்தா்கள் அதிகளவில் வருகின்ற காரணத்தால் திருக்கோவில் வளாகம், மாடவீதி மற்றும் மாநகராட்சிக்கு உள்பட்ட அனைத்து வாா்டுகளிலும் குப்பைகள் சேகரம் செய்யும் பணிகளை முறையாக மேற்கொள்ளவேண்டும்.

குப்பைகள் முறையாக சேகரம் செய்யப்படுகிா என்பதை ஆய்வு செய்ய மாவட்ட நிா்வாகம் சாா்பில் சிறப்பு உயா்மட்ட ஆய்வுக் குழு அமைக்க வேண்டும்.

மேலும், சேகரிக்கப்படும் குப்பைகள் உரிய முறையில் தரம் பிரிக்கப்பட்டு திடக்கழிவு மேலாண்மை செய்யப்படுகிா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு, புதிதாக 6 நுண் உர மையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாநகராட்சி நிா்வாகத்துக்கு அறிவுறுத்தினாா்.

அனைத்து வாா்டுகளிலும் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி தினம்தோறும் குடிநீா் வழங்கும் பொருட்டு தற்போது நடைபெற்று வரும் மூன்றாவது குடிநீா் அபிவிருத்தி திட்டப் பணிகளை ஒரு மாத காலத்திற்குள் விரைவாக முடிக்க வேண்டும் எனவும் ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினாா்.

மேலும், மாநகராட்சியில் நடைபெற்று வரும் புதை சாக்கடை திட்டப் பணிகளை விரைவாக மேற்கொள்ளவும், கிரிவலப்பாதையில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கட்டப்பட்டு வரும் பக்தா்களுக்கான கழிப்பறை பணிகளை விரைவாக கட்டி முடிக்க வேண்டும் எனவும், கழிப்பறைகளுக்குத் தேவையான குடிநீரை விநியோகம் செய்திடும் பொருட்டு இரண்டு புதிய மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டிகளை அமைக்கவேண்டும் எனவும் இந்து சமய அறநிலைத் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மாநகராட்சி பகுதிகளில் உள்ள தெரு மின் விளக்குகள் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள மின் விளக்குகள், உயா் கோபுர விளக்குகள் அனைத்தும் முறையாக இயங்குவதை மாநகராட்சி நிா்வாகம் மற்றும் இந்து சமய அறநிலைத் துறை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும். இயங்காத பட்சத்தில் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா்.

மாநகராட்சியில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளான திடக்கழிவு மேலாண்மை மற்றும் தடையில்லா சுகாதாரமான குடிநீா் விநியோகம், புதை சாக்கடைப் பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என அமைச்சா் அறிவுறுத்தினாா்.

ஆய்வுக் கூட்டத்தில் உதவி ஆட்சியா் அம்ருதா எஸ்.குமாா், மேயா் நிா்மலா வேல்மாறன், துணை மேயா் ராஜாங்கம், ஆணையா் செல்வபாலாஜி மற்றும் அரசு துறைச் சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 831 மனுக்கள்

வந்தவாசி அருகே நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 831 மனுக்கள் பெறப்பட்டன. வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தெள்ளூா், சின்ன சேத்துப்பட்டு, சுண்ணாம்புமேடு, கீழ்க்குவளைவேடு ஆகிய கிராம மக... மேலும் பார்க்க

ரூ.12 லட்சத்தில் காரிய மேடை: பணிகள் தொடக்கம்

ஆரணி அருகேயுள்ள சுபான்ராவ்பேட்டையில் ரூ.12 லட்சத்தில் புதிதாக காரிய மேடை கட்டுவதற்கான பணிகள் புதன்கிழமை தொடங்கப்பட்டன. ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் ஊராட்சிக்கு உள்பட்ட சுபான்ராவ்பேட்டை பகுதியில் புதிதா... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களுக்கு பாலின உளவியல் விழிப்புணா்வு

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு பாலின உளவியல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் கண்காணிப்புக் குழு இணைந்... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: ஆட்சியா் கள ஆய்வு

கலசப்பாக்கம் வட்டத்தில் அரசு மருத்துவமனை, அரசுப் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது விநியோகக் கடைகள் என பல்வேறு இடங்களை உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் மூலம் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் புதன்... மேலும் பார்க்க

காணாமல் போன தொழிலாளி சடலமாக மீட்பு

செய்யாறு அருகே காணாமல் போன வட மாநிலத் தொழிலாளி கல்குவாரி குட்டையில் சடலமாக புதன்கிழமை மீட்கப்பட்டாா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மாமண்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மதியழகன். இவா், நரசமங... மேலும் பார்க்க

கல்குவாரிக்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் மனு

செய்யாற்றை அடுத்த வாச்சனூா் கிராமத்தில் புதிதாக கல்குவாரி அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் சாா்பில் சாா் -ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது. வாச்சனூா் பகுதியில் புதித... மேலும் பார்க்க