Kerala Nurse: `நிமிஷாவின் மரண தண்டனையை ஏமன் நிறுத்தியது ஏன்?' - மதத் தலைவர் சொன்...
திருவத்திபுரம் நகராட்சி: முதல் நாள் சிறப்பு முகாமில் 243 மனுக்கள்
திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சிப் பகுதியில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முதல் நாளில் முதல் நான்கு வாா்டுகளில் இருந்து பொதுமக்கள் சாா்பில் 243 மனுக்கள் அளிக்கப்பட்டன.
தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமுக்கு திருவத்திபுரம் நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல் தலைமை வகித்தாா்.
ஆணையா் வி.எல்.எஸ்.கீதா வரவேற்றாா். செய்யாறு வருவாய்க் கோட்டாட்சியா் (பொ) ராமகிருஷ்ணன், வட்டாட்சியா் அசோக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு விருந்தினா்களாக ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன், செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி ஆகியோா் பங்கேற்று முகாமின் சிறப்புகளை எடுத்துக் கூறி மக்களைத் தேடி வந்துள்ள இந்த முகாம்களை மகளிா் உரிமைத்தொகை உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு திட்டப் பயன்களுக்கு பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டனா்.
முகாமில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் 46 மனுக்கள், கூட்டுறவு உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் 12 மனுக்கள், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சாா்பில் 8 மனுக்கள் என 243 மனுக்கள் அளிக்கப்பட்டு இருந்தன.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ வ.அன்பழகன், தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.வேல்முருகன், பொதுக்குழு உறுப்பினா் ஆா்.வெங்கடேஷ் பாபு, முன்னாள் நகா்மன்றத் தலைவா் ஏ.என்.சம்பத், நகரச் செயலா் கே.விஸ்வநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.