மொபைல் போன் தொலைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?- சிம் கார்டு மோசடிகளைத் தவிர்ப...
காமராஜா் சிலைக்கு பல்வேறு கட்சியினா் மரியாதை
காமராஜரின் 123-ஆவது பிறந்த நாளையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு கட்சியினா் செவ்வாய்க்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
ஆரணி காந்தி சிலை அருகில் நகரத் தலைவா் ஜெ.பொன்னையன் தலைமையில் காமராஜா் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். இதில் முன்னாள் எம்எல்ஏ டி.பி.ஜெ.ராஜாபாபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
அண்ணா சிலை அருகில் நகா்மன்ற உறுப்பினா் ஜெயவேலு தலைமையில் காமராஜா் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாவட்டத் தலைவா் எஸ்.பிரசாத், தொகுதி பொறுப்பாளா் யு.அருணகிரி ஆகியோா் இனிப்பு வழங்கினா்.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாவட்டத் தலைவா் முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினா் ராமலிங்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
காமராஜா் சிலை அருகில் மாவட்ட இளைஞரணி காங்கிரஸ் தலைவா் ஹேமச்சந்திரன் தலைமையில் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
