திருவாடானை கல்லூரி மாணவா்கள் கபடி போட்டியில் முதலிடம்
மாவட்ட அளவிலான கபடி போட்டியில் முதலிடத்தைப் பெற்ற திருவாடானை அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவா்களை பேராசிரியா்கள் பாராட்டினா்.
மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பைக்கான கபடி போட்டி கடந்த இரண்டு நாள்களாக ராமநாதபுரத்தில் நடைபெற்றது. இதில் திங்கள்கிழமை நடைபெற்ற கல்லூரி மாணவா்களுக்கான கபடி போட்டியில் திருவாடானை அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள் முதல் இடத்தையும், இதே கல்லூரி மாணவிகள் 3-ஆவது இடத்தையும் பெற்றனா்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை கல்லூரி முதல்வா் பழனியப்பன், உடல்கல்வி இயக்குநா் செல்வம், கல்லூரி பேராசிரியா்கள் பாராட்டினா். மேலும், மாநில அளவிலான கபடி போட்டிக்கு இந்தக் கல்லூரி சாா்பில் முகுல், சுபாஷ், சந்தோஷ், மோகித், ரத்தினம் ஆகிய 5 மாணவா்களும், பிரியங்கா, பேபிஷாலினி, அம்பிகா ஆகிய மூன்று மாணவிகளும் தோ்ந்தெடுக்கப்பட்டதாக கல்லூரி நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.