மஞ்சூரில் சிறுதானிய பதப்படுத்தும் மையம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள மஞ்சூா் கிராமத்தில் வேளாண் விற்பனை, வேளாண் வணிகத்துறையின் மூலம் மானியத் திட்டத்தின் மூலம் செயல்பட்டு வரும் சிறுதானிய பதப்படுத்தும் மையத்தை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
இந்தக் கிராமத்தில் வேளாண் தொழில் முனைவோா் குமாா் ரூ 21.55 லட்சத்தில் அமைத்துள்ள சிறுதானிய சுத்தம் செய்தல், பதப்படுத்துதல், மாவு அரைத்தல் உள்ளிட்ட இயந்திரங்களின் செயல்பாட்டை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா். வேளாண்மைத் துறை இணை இயக்குநா் பாஸ்கரமணியன், வேளாண் விற்பனை, வணிகத் துறை செயலா் கோபாலகிருஷ்ணன், வேளாண் அலுவலா்கள் உடனிருந்தனா்.