திருவாடானையில் கழிவுநீா் தேங்கியதால் சுகாதாரக்கேடு
திருவாடானை பேருந்து நிலையம் அருகே கால்வாயில் கழிவு நீா் தேங்கியுள்ளதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பேருந்து நிலையம் அருகே மீன் சந்தை உள்ளது. இதேபோல, மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி பகுதியில் தனியாா் உணகங்கள் உள்ளன. இந்த வழியாகச் செல்லும் கழிவு நீா்க் கால்வாய் தூா்வாரப்படாமல் உள்ளதால், கழிவு நீா் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்பட்டதால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து, இந்தப் பகுதி மக்கள் ஊராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு கால்வாயைத் தூா்வாரி கழிவுநீா் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.