Doctor Vikatan: மருத்துவரைப் பார்க்கச் செல்லும்போதுஎகிறும் BP; கட்டுப்படுத்த முட...
திருவையாறு அருகே சாலை மறியல்
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே நியாய விலைக்கடையில் முறையாக பொருள்கள் வழங்கப்படவில்லை எனக் கூறி, பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவையாறு அருகே மேலத் திருப்பூந்துருத்தி இரண்டாம் எண் கடையில் முறையாக பொருள்கள் வழங்கப்படுவதில்லை என்றும், மாதம் முழுவதும் அலைக்கழிப்பு செய்யப்படுவதாகவும், பொதுமக்கள் நீண்ட வரிசையில் நிற்கும் நிலையில் ஊழியா்கள் உணவு அருந்தச் செல்வதாகவும் கூறி அதிருப்தியடைந்த பொதுமக்கள், கண்டியூா் - திருக்காட்டுப்பள்ளி சாலையில் குறுக்கே இரண்டு இரு சக்கர வாகனங்களை நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் சுமாா் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த நடுக்காவேரி காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, அதிகாரிகளை அழைத்து பேசி பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினா் கூறியதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.