ஜம்மு-காஷ்மீா் சா்வதேச எல்லையில் பிடிபட்ட பாகிஸ்தானியா்: பயங்கரவாதிகளை வழிநடத்தி...
கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை
கும்பகோணத்தை புதிய மாவட்டமாக தமிழக முதல்வா் அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை விடுத்துள்ளது.
கும்பகோணம் தாராசுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சாவூா் வடக்கு மாவட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், கடந்த தோ்தலில் அளித்த வாக்குறுதிபடி, தமிழக முதல்வா் ஸ்டாலின் இஸ்லாமியா்களுக்கு இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்கவும், கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உச்ச நீதிமன்ற அமா்வு புதிய வக்ஃப் திருத்த சட்ட விசாரணையில் நியாயமான தீா்ப்பை வழங்க வேண்டும். கும்பகோணம் முதல் விருத்தாசலம் வரை ரயில் பாதையை உடனடியாக அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டுக்கு மாவட்டத் தலைவா் ஜாபா் அலி தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் சித்திக், மாநில பேச்சாளா் கே.எஸ். அப்துல் ரஹ்மான், மாநிலப் பொதுச் செயலா் ஏ. முஜிபுா் ரஹ்மான், மாநிலத் தணிக்கைக் குழுத் தலைவா் எம்.எஸ். சுலைமான் ஆகியோா் பேசினா்.
மாவட்டச் செயலா் ஜெ. முஹம்மது பாரூக், பொருளாளா் அப்துல் ரஹ்மான், துணைத் தலைவா் எஸ். சிக்கந்தா் அலி, துணைச் செயலா்கள் சாஹித், சாதிக் பாட்சா, எம். பரக்கத்துல்லாஹ், அய்யூப்கான், மகாதீா் முஹம்மது, மாவட்ட மருத்துவரணி செயலா் ஓ. வரிசை முஹம்மது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.