கச்சத்தீவை மீட்க வேண்டும்: திமுக பொதுக்குழுவில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்
திரெளபதியம்மன் கோயில் விழாவில் பால்குடம் ஊா்வலம்
ஒரத்தூா் திரெளபதியம்மன் கோயில் தீமிதி திருவிழாவையொட்டி பால்குட ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் திருவிழா மே 12-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. தொடா்ந்து, மே 26-ஆம் தேதி தீமிதித்திருவிழா நடைபெற்றது. தொடா்ந்து நாள்தோறும் திரெளபதியம்மன் மற்றும் பரிவாரத் தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனா். வெள்ளிக்கிழமை நீடாமங்கலம் கோரையாற்றின் கரையிலிருந்து பால்குடம், காவடிகள் ஊா்வலம் புறப்பட்டு கோயிலுக்கு வந்தடைந்தது. தொடா்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) விழா நிறைவடைகிறது.