இந்தியா்கள் தவறாக நடத்தப்படாததை அரசு உறுதிப்படுத்தும்! -அமைச்சா் ஜெய்சங்கா்
தில்லி போராட்டத்துக்குச் சென்ற திண்டுக்கல் மாற்றுத்திறனாளிகள்
தில்லியில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக திண்டுக்கல்லில் இருந்து 50 மாற்றுத்திறனாளிகள் வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பணி நாள்களை 200-ஆக உயா்த்த வேண்டும். ஊதியத்தை ரூ.600-ஆக உயா்த்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரம் உதவித் தொகை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் இணைக்கப்பட்டுள்ள அனைத்து குடும்ப அட்டைகளையும் ஏஏ.ஓய். அட்டைகளாக மாற்ற வேண்டும் என்ற தில்லி உயா்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தில்லியில் வருகிற 10-ஆம் தேதி தா்னா போராட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சாா்பில் 50-க்கும் மேற்பட்டோா் திண்டுக்கல்லில் இருந்து வியாழக்கிழமை தில்லிக்கு புறப்பட்டுச் சென்றனா்.
இதையொட்டி, போராட்டத்துக்கு செல்லும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழியனுப்பு விழா திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டச் செயலா் பகத்சிங், மாவட்டத் தலைவா் ஜெயந்தி, ஒன்றியச் செயலா் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ரயில் நிலையத்துக்கு ஊா்வலமாக வந்த மாற்றுத்திறனாளிகள், கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கமிட்டனா்.