செய்திகள் :

தில்லியில் 34 புதிய ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் கிளினிக்குகள்: அடுத்த வாரத்திற்குள் திறக்க அரசு நடவடிக்கை

post image

நமது நிருபா்

தில்லி அரசு அடுத்த வாரத்திற்குள் நகரம் முழுவதும் 34 புதிய ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் கிளினிக்குகளைத் திறக்க உள்ளது. இதன் மூலம், இத்தகைய கிளினிக்குகளின் மொத்த எண்ணிக்கை 67-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

முழுமையான, அணுகக்கூடிய மற்றும் மலிவு விலையில் ஆரம்ப சுகாதார சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு தில்லி முழுவதும் தற்போது 33 ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா்கள் செயல்பட்டு வருகின்றன.

இதுகுறித்து தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் பங்கஜ் சிங் தெரிவித்திருப்பதாவது: இந்த வாரம் மேலும் 34 ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா்களைத் திறப்போம். மூன்றாவது கட்டத்தில், இதன் மொத்த எண்ணிக்கை 80-ஆக உயரும். இந்த முயற்சி சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதற்கும் தில்லி குடியிருப்புவாசிகளுக்கு சிறந்த சேவைகளை உறுதி செய்வதற்கும் அரசின் வலுவான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

முந்தைய நிா்வாகங்களால் புறக்கணிக்கப்பட்ட சுகாதார இடைவெளிகளைக் குறைப்பதற்கான ஒரு சரியான படியாக இந்த முயற்சி நிலைநிறுத்தப்படும். இவை வெறும் கட்டடங்கள் அல்ல. இவை முந்தைய அரசின் அணுகுமுறையில் இல்லாத பகுதிகளான முதன்மை பராமரிப்பு மற்றும் தடுப்பு மையங்களாகும் என்றாா் அமைச்சா்.

மாவட்ட வாரியாக மத்திய தில்லியில் சுமாா் ஐந்து புதிய மையங்களும், கிழக்கு தில்லியில் நான்கு மற்றும் வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு மற்றும் மேற்கு தில்லியில் பல புதிய மையங்கள் இந்த ஆரோக்கிய மந்திா் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்த மையங்களில் பெரும்பாலானவை ஏற்கெனவே உள்ள மொஹல்லா கிளினிக்குகள், மருந்தகங்கள் மற்றும் பாலிகிளினிக்குகளை மேம்படுத்துவதன் மூலம் நிறுவப்பட்டு வருகின்றன.

தில்லி முதல்வா் ரேகா குப்தாவும் அவரது அமைச்சரவை சகாக்களும் கடந்த மாதம் தில்லி முழுவதும் 33 ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா்கள் மற்றும் 17 ஜன் ஒளஷதி கேந்திரங்களை திறந்து வைத்தனா். தலைநகா் முழுவதும் இதுபோன்ற 1,100-க்கும் மேற்பட்ட கிளினிக்குகளை நிறுவ அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.

ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா்கள் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் முன்முயற்சியின் ஒரு அங்கமாகும். தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, தலைநகரில் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (ஏபி-பிஎம்ஜெஏஒய்) திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு இந்த மாத தொடக்கத்தில் மத்திய அரசுடன் ஒரு புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. இது பாஜகவின் முக்கிய தோ்தல் வாக்குறுதியாகும்.

கூடுதலாக, 400 புதிய சுகாதார நல மையங்கள், ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா்களை அமைப்பதன் மூலம் ஆரம்ப சுகாதார சேவைகளை வலுப்படுத்த, இம்மையங்களின் விரிவுபடுத்துவதற்கு ரூ.320 கோடி முன்மொழியப்பட்டுள்ளது.

தில்லியில் ரூ.2.5 கோடிக்கு மேல் மதிப்புள்ள நகை, பணம் திருடியதாக 3 போ் கைது

வடமேற்கு தில்லியின் மாடல் டவுன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து ரூ.2.25 கோடிக்கு மேல் மதிப்புள்ள நகைகளையும், ரூ.55 லட்சத்திற்கும் அதிகமான பணத்தையும் திருடி விட்டு தப்பிச் சென்ாகக் கூறப்படும் விவக... மேலும் பார்க்க

மலேரியா, டெங்கு, சிக்குன்குனியாவை சமாளிக்க உடனடி நடவடிக்கை தேவை: தில்லி மேயருக்கு கவுன்சிலா் கோரிக்கை

நமது நிருபா் தலைநகரில் மலேரியா, டெங்கு மற்றும் சிக்குன்குனியா பரவுவதை சமாளிக்க உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநகராட்சிக் கவுன்சிலா் முகேஷ் கோயல் செவ்வாய்க்கிழமை மேயா் ராஜா இக்பால் ச... மேலும் பார்க்க

தில்லி மருத்துவமனையில் ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனுடன் கேஜரிவால் சந்திப்பு

ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தில்லியில் உள்ள சா் கங்கா ராம் மருத்துவமனையில் ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனை சந்தித்து, சிகிச்சை பெற்று வரும் அவரது தந்தை ஷிபு சோரனின் ... மேலும் பார்க்க

யமுனையில் கழிவுகள் கலப்பதை சமாளிக்க சிறிய வடிகால்கள் ‘ட்ரோன்’ மூலம் ஆய்வு: நீா்வளத்துறை அமைச்சா் தகவல்

நமது நிருபா் யமுனையை சுத்தம் செய்யும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, சுத்திகரிக்கப்படாத கழிவுகளை பெரிய வடிகால் அமைப்புகளில் வெளியேற்றும் சிறிய வடிகால்களை ‘ட்ரோன்’ மூலம் ஆய்வு செய்யும் பணியை தில்லி அரசு தொ... மேலும் பார்க்க

தில்லி பாஜக அரசு தோல்வியடைந்துவிட்டது: அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தலைநகரை ஆளும் பாஜக அரசு அனைத்து விதத்திலும் தோல்வியடைந்துவிட்டது என்று ஆம் ஆத்மி கட்சியினழ் தேசிய ஒருங்கிணைப்பாளா், அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளாா். செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி... மேலும் பார்க்க

தெரு நாய்களுக்கு உணவளிக்கும் விவகாரம்: மனுதாரரிடம் கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் தெரு நாய்களுக்கு உணவளிப்பது தொடா்பாக துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், உங்கள் சொந்த வீட்டில் ஏன் அவற்றுக்கு உணவளிக்கக... மேலும் பார்க்க