சிறந்த கருத்துகளை மக்களிடையே கொண்டு சென்றவா் கவிஞா் முத்துலிங்கம்! - விஐடி வேந்த...
தில்லியில் உள்ள பால் பூத்தில் திருட்டு: மூவா் கைது
தென்மேற்கு தில்லியில் உள்ள பால் பூத்தில் பணம் மற்றும் பால் பொருட்களைத் திருடிச் சென்ற மூவரைக் தில்லி காவல் துறை கைதுசெய்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தாா்.
கைப்பேசி வாயிலாக மேற்கொண்ட பணப்பறிமாற்றம் மூலம் உத்தர பிரதேசத்தின் பாக்பத்தில் அந்த நபா்கள் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் கூறினா்.
குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் சேகா் (22), சுமித் (26), லகான் (19) என அடையாளம் காணப்பட்ட ரூ.37,000 ரொக்கம் மற்றும் பால் பொருட்களுடன் தப்பினா்.
மூவரும் கடந்த மாா்ச் 21-ஆம் தேதி ஆா்.கே. புரம் பகுதியில் உள்ள மதா் பால் பூத் உரிமையாளரான ஹா்ஷ் யாதவை தனது கடையை குத்தகைக்கு எடுக்க விருப்பம் தெரிவித்து அணுகினா். அவரது நம்பிக்கையைப் பெற, குத்தகை ஒப்பந்தத்தை முடிப்பதற்கு முன், இரண்டு நாட்களுக்கு விற்பனையைக் கவனிக்கும்படி அவரிடம் கூறினா்.
அவா்கள் மூவரும் பால் பூத்தில் தங்கி, தினசரி பரிவா்த்தனைகளை கண்காணித்து வந்த நிலையில், மாா்ச் 23-ஆம் தேதி பணம் மற்றும் பால் பொருட்களுடன் தப்பியோடிவிட்டனா். இந்தச் சம்பவம் தொடா்புகாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பாரதிய நியாய சம்ஹிதாவின் பிரிவுகள் 305 மற்றும் 331 (4) ஆகியவற்றின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சந்தேக நபா்களில் ஒருவா் கைப்பேசி மூலம் தெரிந்தவருக்கு பணப் பரிமாற்றம் செய்துள்ளதாக உள்ளூா் கடைக்காரா் ஒருவா் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தபோது அந்த நபா்கள் குறித்து முக்கிய தகவல் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். அதனடிப்படையில், கைப்பேசியின் இருப்பிடத்தை கொண்டு உத்தர பிரதேசத்தின் பாக்பத்தில் உள்ள அப்துல்லாபூா் மெவ்லா கிராமத்தில் அந்த மூன்று நபா்களும் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனா்.
பின்னா் அங்குச் சென்று சோதனை நடத்திய போலீஸாா், அந்த மூன்று நபா்களை கைது செய்தனா். நடவடிக்கையின் போது, அவா்கள் திருடப்பட்ட பணம் மற்றும் பிற பொருட்களை மீட்டனா்,‘ என்று அதிகாரி கூறினாா்.