ஈரோடு: தோட்டத்து வீட்டில் வசித்த வயதான தம்பதி அடித்துக் கொலை; நகைகள் கொள்ளை; என்...
தீ விபத்தால் வீடு சேதம்: பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு கோரி மனு
எரிவாயு உருளையில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீவிபத்தால் வீடு சேதமடைந்த குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி தமுமுகவினா் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகேயுள்ள வேதாளை மேற்குத் தெருவைச் சோ்ந்த ஆமீனா அம்மாள் குழந்தைகளுடன் வசித்து வந்தாா். கடந்த 16-ஆம் தேதி இவரது வீட்டில் எரிவாயு உருளையில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில், வீட்டில் இருந்த தங்க நகைகள் உள்ளிட்ட பொருள்கள் சேதமடைந்தன. இந்தக் குடும்பத்தின் ஏழ்மை நிலையைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிா்வாகம் இழப்பீடு வழங்கிட வேண்டும் தமுமுக சாா்பில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.