வெறிநாய் கடி; முற்றிய ரேபிஸ்... கோவை மருத்துவமனையில் கண்ணாடியால் கழுத்தை அறுத்த...
துணிகளில் இருக்கும் XL, XXL அளவுகளில் X என்ற எழுத்துக்கு என்ன அர்த்தம் தெரியுமா?
பொதுவாக துணிகள் எடுத்து பார்க்கும் போது அதன் விலையை கவனிப்போம். அடுத்தபடியாக அதன் சைஸ் என்னவென்று பார்ப்போம். நமக்கு ஏற்ற சைஸை தேர்வு செய்வோம்.
XS, S, M, L, XL, XXL, XXXL எழுத்துகளை நாம் துணிகளில் அளவின் குறியீடுகளாக பார்த்திருப்போம். ஸ்மால், மீடியம், லார்ஜ் என்ற அளவுகளில் துணிகள் பிரிக்கப்பட்டு இருக்கும்.
அதில் L, S என்ற எழுத்துக்கு லார்ஜ், ஸ்மால் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் X என்ற எழுத்து எப்படி வந்தது அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

‘எக்ஸ்’ என்றால் எக்ஸ்ட்ரா என்று அர்த்தம். XL என்றால் எக்ஸ்ட்ரா லார்ஜ் என்றும், XXL என்றால் எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா லார்ஜ் என்பதையும் குறிக்கிறது.
சிறிய அளவைவிட கூடுதலாக சிறிய அளவாக இருந்தால் அது எக்ஸ்ட்ரா ஸ்மால் XS என்று குறிப்பிடப்படுகிறது.
பொதுவாக XL அளவுள்ள சட்டை அளவு 42 இன்ச் முதல் 44 இன்ச் வரை இருக்கும். இதேபோல், XXL சட்டைகள் அல்லது ஆடைகள் விஷயத்தில், அளவு பொதுவாக 44 அங்குலங்கள் முதல் 46 அங்குலங்கள் வரை இருக்கும்.