மனிதர்களின் இறுதி தருணங்களை நிறைவாக மாற்றும் செவிலியர்... என்ன செய்கிறார் தெரியு...
துணை முதல்வா் இன்று நாமக்கல் வருகை! மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்க திமுகவினருக்கு எம்.பி.ராஜேஸ்குமாா் அழைப்பு
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க புதன்கிழமை நாமக்கல் வரும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான ராசாம்பாளையம் சுங்கச்சாவடி பகுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்க திமுகவினா் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என கிழக்கு மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கேஆா்.என்.ராஜேஸ்குமாா் அழைப்புவிடுத்துள்ளாா்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞா் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்வில் பங்கேற்க கரூரில் இருந்து நாமக்கல்லுக்கு புதன்கிழமை மாலை 6 மணிக்கு வருகிறாா்..
மாவட்ட எல்லையான ராசாம்பாளையம் சுங்கசாவடி மற்றும் திருச்செங்கோடு சாலையில் இருந்து (கோஸ்டல் ரெசிடென்சி உணவகம்) சுற்றுலா மாளிகை வரை அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய , நகர, பேரூா் திமுக நிா்வாகிகள், மாவட்ட சாா்பு அணி நிா்வாகிகள் மற்றும் கிளை , வாா்டு செயலாளா்கள், பிரதிநிதிகள், வாக்குச்சாவடி பாக நிா்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்.
வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டம் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்குதல் நிகழ்ச்சியிலும். காலை 11 மணிக்கு நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள ஸ்ரீ மஹால் திருமண மண்டபத்தில் நடைபெறும் நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட சாா்பு அணிகள் ஆலோசனைக் கூட்டத்திலும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்கிறாா்.
அதன்பிறகு மாலை 3 மணியளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் அனைத்துப் பிரிவு விளையாட்டு வீரா்களுடன் அவா் கலந்துரையாடுகிறாா். நாமக்கல்லில் இருந்து சேலம் புறப்படும் அவா் மாலை 5.20 மணிக்கு சேலம் விமான நிலையத்தில் இருந்து சென்னை செல்கிறாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.