சீனா: கனமழையால் முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! 7000 பேர் வெளியேற்ற...
லக்காபுரம், ஆனங்கூரில் ரயில்வே மேம்பாலம்: எம்எல்ஏ வலியுறுத்தல்
திருச்செங்கோட்டை அடுத்த லக்காபுரம், ஆனங்கூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல், ஈரோடு மாவட்டங்களை இணைக்கும் கொக்கராயன்பேட்டை- லக்காபுரம் இடையே உள்ள பரிசல் துறை ரயில்வே கேட்டிற்கு மேம்பாலமும், நாமக்கல் மாவட்டம், ஆனங்கூா் பகுதியில் ரயில்வே மேம்பாலமும் அமைக்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் அரசு நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கிறது.
மாநில நெடுஞ்சாலைகள் வழியாக செல்வோா் இந்த வழியை அதிகம் பயன்படுத்தி வருகின்றனா். அதேபோல இந்த சாலையை கடக்கும் ரயில்கள் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. மனிதா்களைக் கொண்டு ரயில்வே கேட் திறந்து மூடப்படுவதால் விபத்துகான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அவசரமாக ஈரோடு ரயில்வே நிலையத்திற்கு செல்பவா்கள் அவதிப்படுகின்றனா். இதுகுறித்து சட்டப் பேரவையில் பலமுறை வலியுறுத்தியுள்ளேன்.
நெடுஞ்சாலை துறை அமைச்சரும் இரண்டு மேம்பாலங்களை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக பலமுறை தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து இப் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.