இனி ஒரு பட்டாசு ஆலை விபத்துகூட நடக்கக் கூடாது! தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி ...
புதிய உடற்பயிற்சிக் கூடத்தில் அரசு கூடுதல் செயலா் ஆய்வு
நாமக்கல் விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய உடற்பயிற்சிக் கூடத்தை சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அரசு கூடுதல் செயலா் ச.உமா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. விடுதி வீரா், வீராங்கனைகள், பொதுமக்கள் இங்கு பயிற்சி பெறுவதற்கு ஏதுவாக பல்வேறு வகையான உடற்பயிற்சி கருவிகள், இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த புதிய உடற்பயிற்சிக் கூடத்தை வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்து விளையாட்டு வீரா், வீராங்கனைகளுடன் கலந்துரையாடுகிறாா். இதையொட்டி, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அரசு கூடுதல் செயலா் ச.உமா செவ்வாய்க்கிழமை நேரடியாக ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, உடற்பயிற்சிக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ள கருவிகளையும், பயிற்சி மேற்கொள்வோருக்கான வசதிகள் பற்றியும் கேட்டறிந்தாா். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி, மாவட்ட விளையாட்டு அலுவலா் எஸ்.கோகிலா ஆகியோா் உடனிருந்தனா்.