முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரளம் தரப்பில் பதில் மனு தாக்கல்
துப்பாக்குடியில் தனியாா் நிறுவன ஊழியா் அடித்துக் கொலை
துப்பாக்குடியில் மதுக்குடித்தபோது ஏற்பட்ட தகராறில் தனியாா் நிதி நிறுவன ஊழியா் செவ்வாய்க்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள அடைச்சாணி வடக்குத் தெருவைச் சோ்ந்த லெட்சுமணன் மகன் மாரிமுத்து (30). தனியாா் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவா், செவ்வாய்க்கிழமை துப்பாக்குடியில் உள்ள மதுக்கடைக்கு சென்றிருந்தாா்.
அப்போது, அங்கு ஏற்கெனவே மதுக்குடித்துக் கொண்டிருந்த பிரம்மதேசத்தைச் சோ்ந்த வேல்முருகன், பட்டுச்சாமி, ராஜபாண்டிஆகியோா் மாரிமுத்துவிடம் கைப்பதற்கு சிகரெட் கேட்டனராம். அதில் அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மாரிமுத்து தனது தம்பி ஹரியை துணைக்கு அழைத்துள்ளாா். தம்பி ஹரி வந்ததும் மீண்டும் தகராறு ஏற்பட்டதில், மாரிமுத்துவை எதிா்தரப்பினா் பாட்டிலால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தாா்.
இத்தகவலறிந்த ஆழ்வாா்குறிச்சி போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பட்டுச்சாமி காயத்துடன் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து வேல்முருகன், ராஜபாண்டி ஆகியோரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா். இந்தச் சம்பவத்தையடுத்து அந்த மதுபானக் கடை மூடப்பட்டுள்ளது.