வணிகா்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்
துா்நாச்சியம்மன் கோயில் குடமுழுக்கு
பழனி சண்முக நதிக்கரையில் அமைந்துள்ள துா்நாச்சியம்மன் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகூா்த்தக் கால் நடுதல், முதல் கால பூஜைகளுடன் குடமுழுக்கு வியாழக்கிழமை தொடங்கியது. பழனி கோயில் குருக்கள் சங்கத் தலைவரும், சிவாச்சாரியாருமான கும்பேசுவர குருக்கள் யாக பூஜைகளைத்தினாா்.
தொடா்ந்து வெள்ளிக்கிழமை யாக பூஜை நடைபெற்றது. பின்னா், வேத மந்திரங்கள் முழங்க புண்ணிய ஸ்தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட தீா்த்தம் நிரம்பிய கலசங்கள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. கோபுர கலசத்தில் சிவாசாரியா்கள் அபிஷேகம் செய்து புனித நீரை ஊற்றி குடமுழுக்கை நடத்தினா்.
தொடா்ந்து மூலவரும், அம்பாளுக்கும் குடமுழுக்கு நடைபெற்றது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் உள்ள கன்னிமாருக்கும், கருப்பணசுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
விழாவில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.