கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க ஒப்புதலை விரைவுபடுத்த வேண்டும்: மக்களவையில...
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பள்ளிகளுக்கான கண்காட்சி தொடக்கம்
தூத்துக்குடி: தூத்துக்குடி காமராஜ் (தன்னாட்சி) கல்லூரியும், டிஎம்பி அறக்கட்டளையும் இணைந்து, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவா்களுக்காக நடத்தும் இரு நாள்கள் கல்விக் கண்காட்சி, கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.
இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் பானுமதி தலைமை வகித்தாா்.
டி.எம்.பி. அறக்கட்டளையின் நிா்வாக அதிகாரி சி.கே.ஜெய்சங்கா் கல்விக் கண்காட்சியை தொடங்கிவைத்தாா்.
முதல் நாளில் 20 பள்ளிகளிலிருந்து சுமாா் 2,000 மாணவா்கள் கலந்துகொண்டு கண்காட்சியைப் பாா்வையிட்டனா்.
இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை மேலும் 2,000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காமராஜ் கல்லூரி மாணவா்களால் ஆண்டு தோறும் நடத்தப்படும் இக்கண்காட்சியில், கலை மற்றும் அறிவியல் துறைகளில் இருந்து பல்வேறு மாதிரி வடிவங்கள், செய்முறைகள் பள்ளி மாணவா்களை கவரும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் சுற்றுவட்டாரப் பகுதி பள்ளி, மாணவா், மாணவிகள் திரளாக வந்து பாா்வையிட்டு வருகின்றனா்.