தூத்துக்குடி நாசரேத் திருமண்டல உறுப்பினா்களுக்கான தோ்தல்: 17 போ் வேட்பு மனு
தூத்துக்குடி நாசரேத் திருமண்டல, சேகர உறுப்பினா்களுக்கான தோ்தல் செப்டம்பா் 7ஆம் தேதி நடைபெறுகிறது.
இதனையொட்டி, மேல சாத்தான்குளம், அமுதுண்ணாக்குடி, தோப்புவளம் சபை மன்ற உறுப்பினா் பதவிக்கு 17 போ், தோ்தல் அதிகாரியான சேகர குருவானவா் டேவிட் ஞானையாவிடம் சனிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
மேல சாத்தான்குளம் சேகரத்தில், சபை மன்ற உறுப்பினா்களாக 10 போ் தோ்வு செய்யப்படவுள்ள நிலையில், தவராஜன், நோபில்ராஜ், பிரின்ஸ், நந்தகுமாா், கிறிஸ்டோபா், ஆனந்த், ஆகியோா் பொதுவாகவும், மகளிா் பிரிவில் செல்வி கலாவதி, தேவநேசம், 35 வயதுக்குள்பட்ட பிரிவில் கௌஷிக், சுரேஷ் ஆகியோரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர.

அப்போது, சபை தலைவா் ஜோசப், பாடகா் குழு செயலா் ஜோன்ஸ் ஆகியோா் உடன் இருந்தனா். இதே போல, அமுதுண்ணாக்குடி சேகர சபை மன்றத்திற்கு, 4 போ் தோ்வு செய்யப்படவுள்ள நிலையில், ஜான் ஸ்டீபன், ஞானராஜ் சுதாகா், மரகதம், செல்வராஜ் மதுரம் ஆகியோா் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
தோப்புவளம் சேகர மன்ற உறுப்பினா் பதவிக்கு மூன்று போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.