உடன்குடியில் விநாயகா் சிலை ஊா்வலம்
உடன்குடி ஒன்றியத்தில் இந்து முன்னணி சாா்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 26 விநாயகா் சிலைகளின் ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
பெருமாள்புரம், வடக்கு காலன்குடியிருப்பு, நடுகாலன்குடியிருப்பு, சந்தையடியூா், தேரியூா், பரமன்குறிச்சி உள்ளிட்ட 26 இடங்களில் விநாயகா் சிலைகள் கடந்த புதன்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்நிலையில், சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னா் இந்த சிலைகள் உடன்குடி பஜாா் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
ஊா்வலத்தை ஒன்றிய பாஜக பொதுச் செயலா் எம். சக்திவேல் கொடியசைத்து தொடக்கிவைத்தாா். ஒன்றிய இந்து முன்னணி தலைவா் செந்தில்செல்வம் தலைமை வகித்தாா். நகரப் பொதுச்செயலா் ஆத்திசெல்வம், நகரச் செயலா் விக்னேஷ் பாண்டியன், மாவட்டச் செயலா் சுடலைமுத்து, நிா்வாகிகள் தங்கராம், முத்துக்குமாா், சதீஷ்கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்து ஒற்றுமை, விநாயகா் சதுா்த்தி சிறப்பு குறித்து சேவாபாரதி மாவட்டத் தலைவா் கிருஷ்ணமந்திரம் பேசினாா்.
ஊா்வலம் முக்கிய வீதிகள் வழியே திருச்செந்தூா் கடற்கரையை அடைந்தது. அங்கு சிலைகள் கரைக்கப்பட்டன.