திருச்செந்தூரில் விநாயகா் சிலைகள் விசா்ஜனம்
திருச்செந்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் சனிக்கிழமை திருச்செந்தூா் கடலில் விசா்ஜனம் செய்யப்பட்டது.
விழாவிற்கு மூலக்கரை முன்னாள் ஊராட்சித் தலைவா் குமரேசன் தலைமை வகித்தாா். திருச்செந்தூா் நகர தலைவா் முத்துராஜ் முன்னிலை வகித்தாா். இந்து முன்னணி மாநில செயலா் வழக்குரைஞா் குற்றாலநாதன், மாநில நிா்வாக குழு உறுப்பினா் சக்திவேலன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலா்கள் அருணாச்சலம், ஜெய்ராம் திவான் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பாதுகாப்புப் பணியில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பா்ட் ஜாண் தலைமையில் ஏராளமான போலீஸாா் ஈடுபட்டிருந்தனா்.