வைரவம் கோயிலில் ஞானாதீஸ்வரா் மீது விழுந்த சூரிய ஒளி
வைரவம் ஸ்ரீ ஞானாதீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை மூலவா் மீது சூரிய ஒளி விழுந்தது.
சாத்தான்குளம் அருகே வைரவம் கிராமத்தில் 1500 வருடம் பழமையான அருள்மிகு ஸ்ரீஞானாதீஸ்வரா் சமேத அருள்தரும் ஸ்ரீ சிவகாமியம்மாள் கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலில் சுவாமி ஞானாதீஸ்வரா் மீது சூரிய ஒளி படும் காட்சி நிகழ்ந்தது. இதனையடுத்து சுவாமிக்கு பல்வேறு வகையான பூஜைகள் நடைபெற்றன.