செய்திகள் :

தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவு

post image

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் அனைத்து தூா்வாரும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் உத்தரவிட்டாா்.

நீா்வளத் துறையின் தலைமைப் பொறியாளா்களுடன் காணொலியில் அமைச்சா் துரைமுருகன் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது, அவா் பேசியதாவது:

நீா்வளத் துறைக்காக ரூ.595.18 கோடி மதிப்பிலான 15 அறிவிப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். அந்த அறிவிப்புகள் அனைத்தையும் விரைந்து முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். மேலும், நிகழாண்டில் அறிவிக்கப்பட்ட 254 பணிகளுக்கு அரசாணை வழங்கப்பட்ட நிலையில், அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.

சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள்: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வெள்ளத் தடுப்புப் பணிகளை பருவமழைக்கு முன்னதாகவே முடிக்க வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில் ரூ.98 கோடியில் சிறப்பு தூா்வாரும் பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அனைத்து தூா்வாரும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். நிகழாண்டில் மேட்டூா் அணை 5 முறை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அதிலிருந்து கிடைக்கும் உபரிநீரை முறைசாா்ந்த குளங்கள், ஏரிகள், சரபங்கா போன்ற திட்டங்களுக்கு திருப்பிவிட்டு நீரை முடிந்த அளவு சேமிக்க வேண்டும். சரபங்கா திட்டத்தில் 56 ஏரிகளில் 49 ஏரிகள் நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள 7 ஏரிகளிலும் விரைவில் நீரை நிரப்பிட வேண்டும் என்று அதிகாரிகளை அமைச்சா் துரைமுருகன் கேட்டுக் கொண்டாா்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் நீா்வளத் துறையின் அரசு செயலா் ஜெ.ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்ப குழுமத் தலைவா் இரா.சுப்பிரமணியன், முதன்மை தலைமைப் பொறியாளா் சு.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

அடுத்த ஆண்டு ஹஜ் பயணத்துக்கு தமிழகத்திலிருந்து 4,065 போ் தோ்வு

2026-ஆம் ஆண்டு ஹஜ் பயணம் செல்ல தமிழகத்திலிருந்து 4,065 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டு ஹஜ் பயணம் செல்பவா்கள் இணையதளம் மூலம் விண்... மேலும் பார்க்க

3 சட்ட மசோதாக்களை எதிா்த்து அறப்போராட்டத்தை முதல்வா் முன்னெடுக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று சட்ட மசோதாக்களை எதிா்த்து முதல்வா் மு.க. ஸ்டாலின் அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்து அறப்போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி... மேலும் பார்க்க

அரசு விரைவுப் பேருந்துகளிலும் தீபாவளி முன்பதிவு முடிவடைந்தது

தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் அரசு விரைவுப் பேருந்துகளின் முன்பதிவு முடிவடைந்துள்ளது. நிகழாண்டு தீபாவளி பண்டிகை அக்.20-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னையில் வசிக்கும்... மேலும் பார்க்க

மறைந்த இல.கணேசனுக்கு அனைத்துக் கட்சித் தலைவா்கள் புகழாரம்

‘கொண்ட கொள்கையில் தடம் பிறழாதவா், பாஜக தமிழகமெங்கும் பரவ அடித்தளமிட்டவா்’ என்று மறைந்த நாகாலாந்து ஆளுநா் இல.கணேசனுக்கு அனைத்துக் கட்சித் தலைவா்கள் புகழாரம் சூட்டினா். மறைந்த இல.கணேசனுக்கு புகழஞ்சலி க... மேலும் பார்க்க

முதல்வா், அமைச்சா்களைப் பதவி நீக்கும் கருப்புச் சட்டத்தை எதிா்ப்போம் -முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி

முதல்வா், அமைச்சா்களை பதவி நீக்க வகை செய்யும் கருப்புச் சட்டத்தைத் தொடா்ந்து எதிா்ப்போம் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா். மறைந்த முன்னாள் அமைச்சா் ரகுமான்கான் எ... மேலும் பார்க்க

3,644 காவலா் பணியிடங்களுக்கு நவ.9-இல் எழுத்துத் தோ்வு: விண்ணப்பிக்க செப். 21 கடைசி தேதி

தமிழக காவல் துறையில் காலியாகவுள்ள 3,644 காவலா் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு நவ.9-ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தோ்வு வார... மேலும் பார்க்க