Cheese: இதயம், எலும்புகளை பாதுகாக்கும்; புற்றுநோய் தடுக்கும்! யார், எவ்வளவு சாப்...
தென் ஆப்பிரிக்க டி20, ஒருநாள் தொடர்: பிக் பாஸ் நாயகனுக்கு அழைப்பு விடுத்த ஆஸ்திரேலியா!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் தென்னாப்பிரிக்க அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற டெஸ்ட் மற்றும் டி20 போட்டி தொடரை 8-0 என்ற கணக்கில் முழுமையாக வென்ற ஆஸ்திரேலிய அணி அதே வேகத்துடன் தென்னாப்பிரிக்க அணிக்கு சவால் அளிக்கும் வகையில் உள்ளது. இவ்விரு அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டி ஆகஸ்ட் 10 ஆம் தேதி துவங்குகிறது.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக ஓய்வளிக்கப்பட்டிருந்த மிட்செல் ஸ்டார்க் மற்றும் கேப்டன் பேட் கம்மின்ஸ் இருவருக்கும் இந்தத் தொடரிலும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதனால், மிட்செல் மார்ஷ் ஒருநாள் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒருநாள் தொடரிலிருந்து மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்டோர் அதிர்ச்சியளிக்கும் விதமாக ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், மிடில் ஆர்டரை வலுப்படுத்தும் நோக்கத்துடன் பிக்-பாஸ் இறுதிப்போட்டி நாயகனாகவும், டி20 போட்டியின் அறிமுகத் தொடரிலேயே அதிரடியாக விளையாடிய மிட்செல் ஓவனுக்கு முதல் முறையாக ஆஸ்திரேலிய அணி அழைப்பு விடுத்திருக்கிறது.
டெஸ்ட் போட்டியில் இருந்து கலட்டிவிடப்பட்ட மார்னஸ் லபுசேனுக்கு ஒருநாள் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காயத்தில் இருந்து மீண்ட மேத்யூ ஷார்ட் ஒருநாள் மற்றும் டி20 என இரண்டு அணியிலும் இடம்பெற்றுள்ளார்.
சீன் அபோட், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், தன்வீர் சங்கா, கூப்பர் கோனொலி மற்றும் ஆரோன் ஹார்டி உள்ளிட்ட அனைவரும் ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அதைத் தொடர்ந்து டி20 அணியில் டிராவிஸ் ஹெட், ஹேசில்வுட் ஆகியோருக்கு இடமளிக்கும் வகையில் ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், ஹார்டி, கோனொலி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
டி20 அணி
மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அபோட், டிம் டேவிட், பென் துவார்ஷுயஸ், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மேட் குஹ்னேமன், மேக்ஸ்வெல், மிட்செல் ஓவன், மேத்யூ ஷார்ட், ஆடம் ஜாம்பா.
ஒருநாள் அணி
மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், அலெக்ஸ் கேரி, பென் துவார்ஷுயஸ், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மார்னஸ் லாபுசேன், லான்ஸ் மோரிஸ், மிட்செல் ஓவன், மேத்யூ ஷார்ட், ஆடம் ஜாம்பா.
Head, Hazlewood return for South Africa series
இதையும் படிக்க :5-ஆவது டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவாரா? இல்லையா? - பயிற்சியாளர் பதில்