மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டு...
தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் சூரியசக்தி மின்விளக்குகள் அமைக்கும் பணி
தென்காசி அருள்மிகு ஸ்ரீஉலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாத சுவாமி கோயிலில் ரூ.5 லட்சம் மதிப்பில் சூரியசக்தி மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இக்கோயிலில் ஏப்ரல் 7ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு கோயிலில் பல்வேறு புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
தென்காசி நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா், இக்கோயிலின் சுவாமி சன்னதி, அம்மன் சன்னதி, முருகன் சன்னதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சூரியசக்தி மின்விளக்குகள் அமைப்பதற்காக ரூ.5 லட்சம் வழங்கியுள்ளாா். இதனையடுத்து கோயிலின் மேல்பகுதிகளில் சூரியசக்தி பேனல்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.