மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டு...
தென்காசியில் ஏப்.6-இல் உயா்கல்வி ஆலோசனை முகாம்
பிளஸ் 2 மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம் தென்காசியில் ஏப்.6-ஆம் தேதி நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஆதிதிராவிடா் நலத் துறையின் சாா்பில் தன்னாா்வ அமைப்புகளுடன் இணைந்து பிளஸ் 2 முடித்துள்ள மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டுதல் முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, தென்காசி மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு வழிகாட்டுதல் முகாம்
தென்காசி அரசு இ.சி.ஈ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஏப்.6-ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த முகாமில் மாணவா்கள் கலந்துகொண்டு தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகமுள்ள படிப்புகள் மற்றும் அப் படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து தெரிந்து கொண்டு பயன்பெறலாம் என்றாா்.