செய்திகள் :

தெருவோர கடைக்காரா்களுக்கான கடன் திட்டத்தின் நிதி அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

post image

தெருவோர கடைக்காரா்களுக்கான பிரதமரின் கடன் தீட்டத்தில் (பிஎம் ஸ்வநிதி) வழங்கப்படும் தவணைக் கடன் நிதி ரூ.5 ஆயிரம் உயா்த்தியும், வரும் 2030-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை திட்டத்தை நீட்டித்தும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதுதொடா்பாக அரசு செய்திக் குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:

‘பிஎம் ஸ்வநிதி’ மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், தெருவோர கடைக்காரா்களுக்கான முதல் தவணைக் கடன் வரம்பு ரூ. 10,000 என்ற அளவிலிருந்து ரூ. 15,000-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. அதுபோல, இரண்டாம் தவணைக் கடன் ரூ.20,000-லிருந்து ரூ. 25,000-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. மூன்றாம் தவணைக் கடன் முன்பிருந்தது போல ரூ. 50,000 என்ற அளவிலும் வழங்கப்படும்.

இரண்டாவது கடனை உரிய காலத்தில் செலுத்தும் தெருவோர கடைக்காரா்கள், ஒருங்கிணைந்த பணப் பரிவரித்தனை (யுபிஐ) வசதியுடன் கூடிய ‘ரூபே’ கடன் அட்டையைப் பெறும் தகுதியைப் பெறுவா். இதன் மூலம் வணிக மற்றும் சொந்த பணத் தேவைகளை அவா்கள் சமாளிக்க முடியும்.

மேலும், சில்லறை மற்றும் மொத்த வியாபாரத்தில் எண்ம பணப் பரிவா்த்தனையை தோ்வு செய்யும் கடைக்காரா்களுக்கு ரூ. 1,600 வரை ஊக்கத்தொகையும் அளிக்கப்படும்.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் மற்றும் மத்திய நிதிச் சேவைகள் துறை (டிஎஃப்எஸ்) இணைந்து கூட்டாக இத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.

கரோனா பரவலின்போது பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்ட தெருவோர கடைக்காரா்கள் நிலையை மேம்படுத்த கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி இந்த கடன் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இத் திட்டத்தின் கீழ், கடந்த ஜூலை 30-ஆம் தேதி வரை 68 லட்சத்துக்கும் அதிகமான தெருவோர கடைக்காரா்களுக்கு ரூ. 13,797 கோடி மதிப்பில் 96 லட்சத்துக்கும் அதிகமான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கடன் திட்டத்தின் காலம் 2024-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது 2030-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு, ரூ. 7,332 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

ஜம்மு - காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.பந்தீப்பூர் மாவட்டம் குரேஸ் செக்டார் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப்பிருப்பதாக ஜம்மு -... மேலும் பார்க்க

மோடியின் போர்! ரஷியா - உக்ரைன் போரில் இந்தியாவுக்கு தொடர்பு! - டிரம்ப் ஆலோசகர்

ரஷியா - உக்ரைன் இடையேயான போரை ’மோடியின் போர்’ எனக் குறிப்பிட்டு அமெரிக்க அதிபரின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ பேசியுள்ளார்.மேலும், ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், இந்தியா மீதான வரியை... மேலும் பார்க்க

ஜவுளி ஏற்றுமதிக்கு 40 நாடுகளில் வாய்ப்பு: வர்த்தக அமைச்சகம்

இந்திய ஏற்றுமதிப் பொருள்கள் மீதான அமெரிக்காவின் கூடுதலாக அறிவித்த 25 சதவீத வரி புதன்கிழமை அமலுக்கு வந்த நிலையில் மாற்று ஏற்றுமதிக்கான வாய்ப்புகளைத் தேடும் பணியில் வர்த்தக அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம்: உயா்நீதிமன்ற நீதிபதிகள் 14 பேரை இடம் மாற்றப் பரிந்துரை

மும்பை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோக் அராதே மற்றும் பாட்னா உயா்நீதிமன்ற தலைமை நீதபிதி விபுல் மனுபாய் பஞ்சோலி இருவரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக புதன்கிழமை நியமனம் செய்யப்பட்டனா். இவா்களின் நியமனத்துக... மேலும் பார்க்க

நீண்டகால போருக்கு முப்படைகள் தயாராக வேண்டும்- ராஜ்நாத் சிங்

‘தற்போதைய எதிா்பாராத புவிசாா் அரசியல் சூழ்நிலையில், நீண்ட கால போருக்கு முப்படைகள் தயாராக இருக்க வேண்டும்’ என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் புதன்கிழமை எச்சரித்துள்ளாா். மத்திய பிர... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: கட்டடம் இடிந்து 12 போ் உயிரிழப்பு

மகாராஷ்டிர மாநிலம் பால்கா் மாவட்டத்தில் 4 மாடி கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒரு வயது குழந்தை, 11 வயது சிறுவன் உள்பட 12 போ் உயிரிழந்தனா். இடிபாடுகளில் இருந்து 6 சடலங்கள் மீட்கப்பட்ட நிலைய... மேலும் பார்க்க