Vijay: "உண்மையாகவே தியேட்டரில் பார்க்கணும்" - விஜய் செய்த கால்; நெகிழ்ந்த ராஜு ஜ...
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் மணிகண்டன்!
இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் மணிகண்டன் குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் என அடுத்தடுத்து வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகராக உருவெடுத்துள்ளார்.
நடிகராக மட்டுமல்லாமல் திரைக்கதையாளர், டப்பிங் கலைஞர் என பன்முகத் திறமையாளனரான மணிகண்டன் அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிங்கு பெரியசாமி நடிகர் சிம்புவின் 50-வது படத்தை இயக்க நீண்ட காலமாகக் காத்திருக்கிறார். ஆனால், தொடர்ந்து அப்படம் தள்ளிப்போவதால் சிறிய படமொன்றை இயக்கும் திட்டத்தில் இருக்கிறாராம். இவர்கள் இணையும் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: தெலுங்கில் வசூல் ஈட்டும் குபேரா!