PM CM Removal Bill - பாஜகவின் மாஸ்டர் பிளான்! கொதிக்கும் எதிர்க்கட்சிகள் | Decod...
தேசிய அறிவியல் மனப்பான்மை தின உறுதி மொழி ஏற்பு
ராமேசுவரம்: மண்டபம் ஊராட்சி ஒன்றியம், பாம்பன் சின்னப்பாலம் அரசு நடுநிலைப் பள்ளியில், தேசிய அறிவியல் மனப்பான்மை தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இதற்கு பள்ளித் தலைமை ஆசிரியை செல்லம்மாள் தலைமை வகித்தாா். ஆசிரியை ஞானசௌந்தரி வரவேற்றாா். தேசிய அறிவியல் மனப்பான்மை தின முக்கியத்துவம் குறித்து ஆசிரியா் ஜெ.ஜே.லியோன் பேசினாா். ஆசிரியை நிஷா நன்றி கூறினாா். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியா்கள், மிக்கேல் ராணி, சந்திரமதி, லாரன்ஸ் எமல்டா, அமுதவள்ளி, நான்சி, பிரிஸ்கிலா ஆகியோா் செய்தனா்.