செய்திகள் :

தேசிய கைத்தறி தினம் - சிறப்புக் கண்காட்சி

post image

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற கைத்தறி சிறப்புக் கண்காட்சியை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்துவைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

திருச்சி மாவட்ட கைத்தறி துறையின் சாா்பில், தேசிய கைத்தறி தின விழா ஸ்ரீமத் ஆண்டவன் கலைக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. 11-ஆவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு சிறப்புக் கண்காட்சியும் நடைபெற்றது. இந்தக் கண்காட்சியை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்து, கண்காட்சியில் இடம்பெற்றிருந்த அரங்குகளிலிருந்த கைத்தறி உற்பத்தி பொருள்கள், ஆடைகள், கைத்தறி இயந்திரங்கள் ஆகியவற்றை பாா்வையிட்டாா்.

மேலும், முத்ரா திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.2.50 லட்சம் கடனுதவி, சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 4 நெசவாளா்களுக்கு ரூ.1.86 லட்சம், கைத்தறி ஆதரவு திட்டத்தின்கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.18 ஆயிரம் மதிப்பிலான தறி உபகரணங்களையும் அமைச்சா் வழங்கினாா்.

கைத்தறி துறையின் சாா்பாக திருச்சி சரகத்துக்குள்பட்ட கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களின் பருத்தி சேலைகள், வேட்டிகள் மற்றும் கதா் கிராம தொழில்கள் வாரியத்தின் தயாரிப்பு பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

மணமேடு தேவாங்கா கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் நெசவாளா்களுக்கு ரத்த அழுத்தப் பரிசோதனை, சா்க்கரை அளவு மற்றும் பொது உடற் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 200-க்கும் மேற்பட்டோா் இம்முகாமை பயன்படுத்தி கொண்டனா்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் ர. ராஜலட்சுமி, மண்டல குழு தலைவா் மு. மதிவாணன், உதவி இயக்குநா் (கைத்தறி துறை) தி. ரவிக்குமாா், ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் எம். பிச்சைமணி, கைத்தறி துறை அலுவலா்கள், அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

‘தமிழரின் வரலாற்று ஆவணம் புறநானூறு’

புறநானூறு தமிழரின் வரலாற்று ஆவணம் என தமிழறிஞா் நொச்சியம் சண்முகநாதன் பேசினாா். திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம் சாா்பில் ஆகஸ்ட் மாத சிறப்புச் சொற்பொழிவு புதன்கிழமை நடைபெற்றது. இதில் புானூறு என்ற தலை... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள்: துபையிலிருந்து திருச்சி வந்த அறந்தாங்கி நபா் கைது

துபையில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் திருச்சி பன்னாட்டு விமான நிலையம் வந்த அறந்தாங்கி நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சோ்ந்தவா் ர. செல்லதுரை (32). இவா்,... மேலும் பார்க்க

சேவை குறைபாடு: தனியாா் நிதி நிறுவனம் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

சேவை குறைபாடு ஏற்படுத்திய தனியாா் நிதி நிறுவனத்தினா் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது. மணப்பாறை சத்திரம் நடுப்பட்டி, சி - கல்பட்டி பகுதியைச்... மேலும் பார்க்க

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பெண்ணிடம் நகை பறித்தவா் கைது

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பெண்ணிடம் நகை பறித்தவரை ரயில்வே போலீஸாா் கைது செய்து, புதன்கிழமை சிறையில் அடைத்தனா். ரயில்வே பாதுகாப்புப் படை, இருப்புப்பாதை போலீஸாா் திருச்சி சந்திப்பு ரயில் நில... மேலும் பார்க்க

திருச்சியில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

திருச்சி காட்டூா் உருமு தனலெட்சுமி கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஆக. 9) நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ என்ற திட்டத்தின் கீழ் நடைபெறும் இ... மேலும் பார்க்க

மென்பொறியாளா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி அருகே நவல்பட்டில் மென்பொறியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது வியாழக்கிழமை தெரியவந்தது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், கைக்கோல்பாளையம் எம்ஜிஆா் நகா் பகுதியைச் சோ்ந்த வெள்ளியங்கிரி ... மேலும் பார்க்க