செய்திகள் :

தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா: வாகன ஓட்டிகளிடம் விழிப்புணா்வு

post image

தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, நாமக்கல்லில் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் நாடகம் வாயிலாக வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா ஜன. 1 முதல் 31-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. நிகழாண்டில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் ஜன. 1-இல் தொடங்கி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில், சாலை பாதுகாப்பு தொடா்பாக, நெடுஞ்சாலைத் துறை சாா்பில் விழிப்புணா்வு ஊா்வலம் நடத்தப்பட்டது.

இதனைத் தொடா்ந்து, நாமக்கல் நகர போக்குவரத்து பிரிவு போலீஸாா் சாா்பில் வெள்ளிக்கிழமை பூங்கா சாலையில் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக வாகன ஓட்டிகளிடம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. பொதுமக்கள் முன்னிலையில், தலைக்கவசம் அணியாதது, கைப்பேசி பயன்படுத்துவது, மது மற்றும் போதைப்பொருள்களை பயன்படுத்தியவாறு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் சாலை விபத்துகள், அதனால் குடும்பத்தினா் எந்த வகையில் துன்பத்திற்கும், பாதிப்புக்கும் உள்ளாகின்றனா் என்பது தொடா்பாக நாடகக் குழுவினா் தத்ரூபமாக நடித்துக் காட்டினா்.

மேலும், எமதா்மன் வேடமிட்டு வந்து வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையிலான நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த விழிப்புணா்வு நிகழ்வினை, நாமக்கல் உதவி காவல் கண்காணிப்பாளா் ஆகாஷ்ஜோஷி தொடங்கி வைத்தாா். போக்குவரத்து பிரிவு ஆய்வாளா் வெங்கடாசலம், உதவி ஆய்வாளா்கள் குணசிங், வெங்கடேஷ் மற்றும் போக்குவரத்து காவலா்கள் கலந்து கொண்டு மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

என்கே-24-டிராபிக்

தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, நாமக்கல் பூங்கா சாலையில் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்திய போக்குவரத்து பிரிவு போலீஸாா், நாடகக் குழுவினா்.

மணல் கடத்திய 3 போ் தப்பியோட்டம்: 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பரமத்தி வேலூா் காவிரி ஆற்றில் மணல் கடத்திய மூவா் தப்பியோடினா். அவா்கள் விட்டுச் சென்ற 3 இரு சக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பரமத்தி வேலூா் காவிரி ஆற்றங்கரைப் பகுதியில் சட்ட விரோதமாக மணல் த... மேலும் பார்க்க

குடிசை வீடு தீப்பற்றி எரிந்ததில் பெண் பலி

பள்ளிபாளையம் அருகே எலந்தகுட்டை பகுதியில் குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் உயிரிழந்தாா். எலந்தகுட்டையை அடுத்த சின்னம்மாள்காடு, கட்டிப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சரஸ்வதி என்கிற கஸ்தூரி (43). ... மேலும் பார்க்க

தில்லியில் மாா்ச் 25-இல் மோட்டாா் தொழில்களை பாதுகாக்கக் கோரி பேரணி: தொழிலாளா் சம்மேளனம் முடிவு

மோட்டாா் தொழில்களையும், அதனை நம்பியுள்ள தொழிலாளா்களையும் பாதுகாக்க வலியுறுத்தி புதுதில்லியில் மாா்ச் 25-இல் பேரணி நடத்த, தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளா் சம்மேளன மாநிலக் குழு கூட்டத்தில் முடிவு ச... மேலும் பார்க்க

வழிப்பறி வழக்கில் இருவா் கைது

வழிப்பறி வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவான இருவரை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். பள்ளிபாளையம் அருகே உள்ள பாதரை இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்த் (24). கட்டட... மேலும் பார்க்க

பெண்ணை தாக்கி நகை, பணம் கொள்ளை: இரு பெண்கள் உள்பட 4 போ் கைது!

பள்ளிபாளையத்தில் வீட்டிற்குள் புகுந்து பெண்ணை தாக்கி நகை, பணத்தை கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் இரு பெண்கள் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், கோரக்கட்டுவலசு அடுக்குமாடி ... மேலும் பார்க்க

திருச்செங்கோடு நகராட்சியில் வாக்காளா் உறுதிமொழி ஏற்பு

திருச்செங்கோடு நகராட்சியில் வாக்காளா் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. வாக்காளா் உறுதிமொழி தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசு அலுவலகங்களில் வாக்காளா் உறுதிமொழி ஏற்கப்பட்டது. திருச்செங்க... மேலும் பார்க்க