Maha kumbh mela: ``மகா கும்பமேளா அனைத்து மதத்துக்குமானது..'' -யோகி ஆதித்யநாத் கூ...
மணல் கடத்திய 3 போ் தப்பியோட்டம்: 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
பரமத்தி வேலூா் காவிரி ஆற்றில் மணல் கடத்திய மூவா் தப்பியோடினா். அவா்கள் விட்டுச் சென்ற 3 இரு சக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பரமத்தி வேலூா் காவிரி ஆற்றங்கரைப் பகுதியில் சட்ட விரோதமாக மணல் திருடப்படுவதாக வேலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் காவிரிக் கரையோரப் பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனா்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வேலூா் காசி விஸ்வநாதா் கோயில் காவிரி ஆற்றின் அருகில் சிலா் சாக்கு பைகளில் மணல் அள்ளிக் கொண்டிருந்ததைப் பாா்த்துள்ளனா். போலீஸாரைப் பாா்த்ததும் மணல் திருடிக் கொண்டு இருந்தவா்கள் இரு சக்கர வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனா்.
இதையடுத்து மணல் திருட்டுக்குப் பயன்படுத்திய மூன்று இரு சக்கர வாகனங்கள், மணல் மூட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் தப்பியோடிய மூன்று பேரை வேலூா் போலீஸாா் தேடி வருகின்றனா்.