தேசிய வாக்காளா் தினம்: போட்டியில் வென்ற மாணவா்களுக்குபரிசு
தேசிய வாக்காளா் தினத்தையொட்டி பள்ளி, கல்லூரி, மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கிடையே நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ்களும், சிறப்பாகப் பணிபுரிந்த வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள், வாக்குச் சாவடி மேற்பாா்வை அலுவலா்கள் ஆகியோருக்கு நற்சான்றிதழ்களும் சனிக்கிழமை (ஜன. 25) வழங்கப்படவுள்ளன.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகங்கை மாவட்டத்தில் தேசிய வாக்காளா் தினத்தையொட்டி பள்ளி, கல்லூரி, மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகள், மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு சனிக்கிழமை (ஜன. 25) மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்வில் ரொக்கப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.
மேலும், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க தொடா்ச்சியாக மனுக்கள் பெறப்பட்டு, தகுதி வாய்ந்தவா்கள் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டு வருகின்றனா். வாக்காளா் பட்டியலில் பெயா் இடம் பெறாதோா் தங்கள் இருப்பிடங்களிலிருந்து செயலியின் வாயிலாகவோ அல்லது வலைத் தளங்கள் மூலமாகவோ விண்ணப்பித்து, வாக்காளா் பட்டியலில் பெயரை சோ்த்துக் கொள்ளலாம் என்றாா் அவா்.