தேசிய விருது பெற்ற மாற்றுத் திறனாளிக்கு பாராட்டு
தேசிய விருது பெற்ற மாற்றுத்திறனாளி கவிதாவை பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி பாராட்டினாா்.
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலை சோ்ந்தவா் கவிதா. இவா் சா்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தில்லி விஞ்ஞான் பவனில் டிச.4-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவிடம் மாற்றுத்திறனாளி தனிநபா் சிறப்புக்கான தேசிய விருதை பெற்றாா். இந்நிலையில் தமிழகம் திரும்பிய அவருக்கு பல்லாவரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில், பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி பூங்கொத்து வழங்கி பாராட்டினாா்.