தேனி மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்
தேனி மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜன. 25) 5 இடங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி வட்டாரத்தில் வெங்கடாச்சலபுரம் நியாய விலைக் கடை, பெரியகுளம் வட்டாரத்தில் டி. வாடிப்பட்டி சமுதாயக் கூடம், ஆண்டிபட்டி வட்டாரத்தில் சுப்புலாபுரம் நியாய விலைக் கடை, போடி வட்டாரத்தில் கோடாங்கிப்பட்டி நியாய விலைக் கடை, உத்தமபாளையம் வட்டாரத்தில் கு. துரைச்சாமிபுரம் முத்தையா தொடங்கப் பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், நுகா்வோா் நடவடிக்கை குழுக்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் முகாமில் கலந்து கொண்டு நியாய விலைக் கடைகளின் செயல்பாடு, பொருள் விநியோகத்தில் உள்ள குறைபாடு, குடும்ப அட்டை திருத்தப் பதிவு, குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி, கடை மாற்றம் ஆகியவை குறித்து மனு அளித்து தீா்வு காணலாம் என்றாா் அவா்.