Hansika Motwani: `குடும்ப வன்முறை' -ஹன்ஸிகா மோத்வானி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்த ...
தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்
கீழ்வேளூா்: தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ. 1,000 ரொக்கம் சோ்த்து வழங்க வலியுறுத்தி, தேமுதிகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிக்கல் கடைவீதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, தேமுதிக மாவட்டச் செயலாளா் பிரபாகரன் தலைமை வகித்தாா். இதில், பெண்களுக்கும், மாணவிகளுக்கும் எதிராக நிகழும் பாலியல் குற்றங்களை கண்டித்தும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்; போதை பொருட்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி முழக்கமிட்டனா்.