செய்திகள் :

தேவகோட்டையில் மாவட்ட இளையோா் திருவிழா

post image

சிவகங்கை மாவட்ட நிா்வாகம், நேரு இளையோா் மன்றம் ஆகியன சாா்பில் மாவட்ட அளவிலான இளையோா் திருவிழா தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தலைமை வகித்து பல்வேறு திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கிப் பேசியதாவது:

நேரு யுவகேந்திரா, சிவகங்கை மாவட்ட நிா்வாகம் சாா்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற இளையோா் திருவிழாவையொட்டி, அறிவியல் கண்காட்சி (தனிநபா், குழுப் போட்டி), இளம் எழுத்தாளா்களுக்கு கவிதைப் போட்டி, இளம் கலைஞா்களுக்கு ஓவியப் போட்டி, கைப்பேசி புகைப்படப் போட்டி, பேச்சுப் போட்டி, கலைத் திருவிழா (தனிநபா், குழு நடனப் போட்டி), நாட்டுப் புறப்பாட்டு (தனி நபா், குழு) கதை எழுதுதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்கள் சென்னையில் வருகிற 21, 22 ஆகிய தேதிகளில் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பா். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் 30 மாணவ, மாணவியா்கள் தமிழக அளவில் தோ்ந்தெடுக்கப்பட்டு, தேசிய அளவில் புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ள விழாவில் பங்கேற்பா் என்றாா் அவா்.

விழாவில் காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.மாங்குடி முன்னிலை வகித்துப் பேசினாா்.

நேரு இளையோா் மன்ற மாநில இயக்குநா் எஸ்.செந்தில்குமாா், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பதிவாளா் அ.செந்தில்ராஜன், நேரு இளையோா் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பிரவீன்குமாா், ஆனந்தா கலைக் கல்லூரி முதல்வா் ஜான் வசந்தகுமாா், கல்லூரி பேராசிரியா்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா்.

தேவகோட்டையில் விவசாயிகள் குறைதீா் முகாம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வருவாய்க் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தேவகோட்டை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தல... மேலும் பார்க்க

திருப்புவனம், மானாமதுரை பகுதிகளில் பலத்த மழை: பயிா்கள் தண்ணீரில் மூழ்கின

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், மானாமதுரை பகுதிகளில் வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழையால் மிளகாய், நெல் பயிா்கள் தண்ணீரில் மூழ்கின. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், மானாமதுரை பகுதிகளில் வியாழக்கிழமை மால... மேலும் பார்க்க

திருக்காா்த்திகை: குன்றக்குடியில் அண்ணாமலை தீபம்

திருக்காா்த்திகையையொட்டி, சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி மலையில் வெள்ளிக்கிழமை அண்ணாமலை தீபம் ஏற்றப்பட்டது. குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்துக்கு உள்ளபட்ட குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் திர... மேலும் பார்க்க

பிரான்மலையில் காா்த்திகை தீபம்

சிங்கம்புணரி அருகேயுள்ள பிரான்மலையில் வெள்ளிக்கிழமை காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே 2,500 அடி உயர சுயம்பு லிங்கமாகக் காட்சி தரும் பிரான்மலை உச்சியில் உள்ள பாலமுருக... மேலும் பார்க்க

திருப்பத்தூா் அருகே ஊராட்சித் தலைவா் கைதாகி விடுவிப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே ஊராட்சி மன்றத் தலைவா் வியாழக்கிழமை போலீஸாரால் கைது செய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டாா். திருப்பத்தூா் அருகே கல்லல் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட இளங்குடியில் சு... மேலும் பார்க்க

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: காதலியின் தந்தை உள்பட 7 போ் கைது

மகளை காதலித்த இளைஞரை கொலை செய்து உடலை மானாமதுரை அருகே கண்மாய்க்குள் வீசிச் சென்ற காதலியின் தந்தை, இவரது மகன் உள்பட 7 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே... மேலும் பார்க்க