வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு
பிரான்மலையில் காா்த்திகை தீபம்
சிங்கம்புணரி அருகேயுள்ள பிரான்மலையில் வெள்ளிக்கிழமை காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே 2,500 அடி உயர சுயம்பு லிங்கமாகக் காட்சி தரும் பிரான்மலை உச்சியில் உள்ள பாலமுருகன் குன்றில் பிரான்மலை வள்ளலாா் மடம், பக்தா்கள் சாா்பில் 130 லிட்டா் கொள்ளளவு கொண்ட இரும்பாலான புதிய கொப்பரை தயாா் செய்யப்பட்டிருந்தது. இந்தக் கொப்பரை எண்ணெய் ஊற்றப்பட்ட திரிகளால் நிரப்பப்பட்டது. காா்த்திகை திருநாளையொட்டி, மாலை 5 மணியளவில் தீபம் ஏற்றப்பட்டது. இதில் பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். தொடா்ந்து மலை உச்சியில் அன்னதானம் வழங்கப்பட்டது.
மலை தீபத்தை வணங்கிய பின்னரே சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் தங்களது வீடுகளில் தீபம் ஏற்றினா்.
இதேபோல, பிரான்மலை தீபத்தை வணங்கிய பின்னரே அடிவாரப் பகுதிகளான சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயில், சிவபுரிபட்டி சுயம்பிரகாஷஈஸ்வரா் கோயில், சதுா்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரா் கோயில், கரிசல்பட்டி கைலாசநாதா் கோயில், உலகம்பட்டி உலகநாதா் சுவாமி கோயில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.