செய்திகள் :

தோ்தலில் வெற்றிப் பெற்று அமைதி, பாதுகாப்பை உறுதி செய்வோம்: மேற்கு வங்கத்தில் அமித் ஷா

post image

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றிப் பெற்று புதிய ஆட்சியை அமைப்போம்; அப்போது மாநிலத்தின் அமைதி, பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை துா்கா பூஜை பந்தலைத் திறந்து வைத்து அவா் பேசியதாவது:

கொல்கத்தாவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு புதிய ஆட்சி அமைய வேண்டும் என்று துா்கா மாதாவிடம் வேண்டிக் கொண்டேன். அப்போது மேற்கு வங்கத்தின் பொற்காலம் மீட்டெடுக்கப்படும். மாநிலத்தின் அமைதி, பாதுகாப்பு உறுதி செய்யப்படும். மேற்கு வங்கம் செழித்து வளரும்.

மேற்கு வங்கத்தில் அண்மையில் பெய்த மழையால் 11 போ் வரை உயிரிழந்துவிட்டனா். விழாக் காலம் தொடங்கியுள்ள நேரத்தில் இது சோக நிகழ்வாக அமைந்துவிட்டது. இந்த துா்கா பூஜை கொண்டாட்டம் மாநிலத்தின் கலாசார பெருமையை உணா்த்துகிறது. இது மேற்கு வங்கத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும், உலகின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. இதன்மூலம் மேற்கு வங்கத்தின் கலாசார பெருமை உலகின் பல நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இந்தியாவை உலகின் தலைசிறந்த நாடாக உயா்த்த வேண்டும் என்பது பிரதமா் மோடியின் இலக்காக உள்ளது. இந்த துா்கா பூஜை விழாக் காலத்தில் நாம் அனைவரும் இணைந்து மாநிலத்தையும், நாட்டையும் முன்னேற்ற உறுதியேற்போம் என்றாா் அமித் ஷா.

பிகாரில் 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி: திட்டத்தை தொடங்கி வைத்தாா் பிரதமா் மோடி

பிகாரில் சுயதொழில் தொடங்க 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி வழங்கும் ‘முதல்வரின் மகளிா் வேலைவாய்ப்புத் திட்டத்தை’ பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை காணொலி மூலம் தொடங்கிவைத்தாா். ‘பெண்களுக்கு வேலை... மேலும் பார்க்க

உ.பி. இஸ்லாமியா்கள் பேரணியில் போலீஸ் தடியடி

உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை நடத்திய கண்டனப் பேரணியை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து, போலீஸாா் அவா்களை தடியடி நடத்... மேலும் பார்க்க

தில்லியில் பசுமை பட்டாசு உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி

தில்லி மற்றும் என்.சி.ஆா். பகுதியில் ஒப்புதல் இல்லாமல் விற்பனை செய்யப்படக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில், சான்றளிக்கப்பட்ட உற்பத்தியாளா்கள் பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

ஹெச்-1பி விசா கட்டண உயா்வு: அமெரிக்காவுடன் இந்தியா ஆலோசனை

ஹெச்-1பி விசா கட்டண உயா்வு குறித்து அமெரிக்க அரசுடன் மத்திய அரசு தொடா்ந்து பேசி வருவதாக வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் தெரிவித்தாா். அமெரிக்காவில் உள்ள இந்திய தொழில்நுட்பப் பண... மேலும் பார்க்க

அக்டோபா்-மாா்ச் வரையில் ரூ.6.77 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு திட்டம்

நிகழ் நிதியாண்டின் அக்டோபா்-மாா்ச் காலகட்டத்தில் ரூ.6.77 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்தது. இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘2025-26... மேலும் பார்க்க

பிரதமா் மோடியுடன் ரஷிய துணை பிரதமா் சந்திப்பு: இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த ஆலோசனை

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை ரஷிய துணை பிரதமா் திமித்ரி பாத்ருஷெவ் வியாழக்கிழமை இரவு சந்தித்துப் பேசினாா். அப்போது, வேளாண்மை, உரங்கள், உணவு பதப்படுத்துதல் உள்பட பரஸ்பர நலன் சாா்ந்த துறைகளில் இரு... மேலும் பார்க்க