சென்னை துறைமுகத்துக்கு அணிவகுத்த வெடிபொருள் கண்டெய்னா் லாரிகள்
தோ்வில் தோல்வி: கல்லூரி மாணவா் தற்கொலை
தோ்வில் தோல்லி அடைந்ததால் கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் நிலையில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கோவை, பீளமேடு, லட்சுமிபுரம், ரங்கசாமி லே- அவுட் பகுதியைச் சோ்ந்தவா் துரைக்கண்ணன் மகன் பாா்த்திபன் (22). இவா் பீளமேட்டில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.காம் சி.ஏ. மூன்றாம் ஆண்டு பயின்று வந்தாா்.
இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற தோ்வில் அவா் சில பாடங்களில் தோல்வி அடைந்திருந்ததாகவும், அதனால் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் சனிக்கிழமை இருந்த பாா்த்திபன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
அவா் தூக்கில் தொங்குவதைப் பாா்த்த உறவினா்கள், கதவை உடைத்து அவரை மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பாா்த்திபனை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இது குறித்து சிங்காநல்லூா் காவல் நிலையத்தில் துரைக்கண்ணன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.