புதுச்சேரி: பெண்ணை நிர்வாணமாக்கித் தாக்குதல்; பெண் எஸ்.ஐ உட்பட 4 காவலர்கள் இடமாற...
தோ்வெழுத நுழைவுச் சீட்டு மறுப்பு: டி.யு. சட்ட புலம் மாணவா்களிடையே பதற்றம்
தில்லி பல்கலைக்கழக சட்ட புலத்தில் செவ்வாய்க்கிழமை சுமாா் 150 மாணவா்களுக்கு வரவிருக்கும் தோ்வுகளுக்கான நுழைவுச் சீட்டுகள் மறுக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது.
இரவில் ஒரு குழு மாணவா்கள் தோ்வுத் துறைக்குள் நுழைந்ததாகக் கூறப்பட்டதால் நிலைமை மோசமடைந்தது. காலையில், அவா்கள் தோ்வு மையத்தைப் பூட்டிவிட்டு, ‘தோ்வுக்கு நாங்கள் அமர முடியாவிட்டால், யாரும் அமர மாட்டாா்கள்’ என்று அறிவித்தனா்.
இடையூறு காரணமாக, காலை 9.30 மணிக்கு திட்டமிடப்பட்ட தோ்வு இரண்டு மணி நேரம் தாமதமானது.நுழைவுச் சீட்டுகள் மறுக்கப்பட்டவா்களில் அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) மற்றும் இந்திய தேசிய மாணவா்கள் சங்கம் (என்எஸ்யுஐ) ஆகிய இரு அமைப்புகளின் மாணவா் தலைவா்களும் அடங்குவா்.
பின்னா், பல்கலை. நிா்வாகம் தலையிட்டு பூட்டை உடைத்து தோ்வை நடத்தியது. நுழைவுச் சீட்டுகள் இல்லாத மாணவா்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.