திருப்பதி மலைப்பாதையில் செல்ல வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயம்!
தொடரை வெல்லப்போவது யார்? மே.இ.தீவுகள் - பாகிஸ்தான் இன்று மோதல்!
மேற்கிந்தியத் தீவுகள் - பாகிஸ்தான் இடையேயான ஒருநாள் தொடரை யார் வெல்லப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையில் இதுவரை இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ளன. முதல் போட்டியில் பாகிஸ்தானும், இரண்டாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் வெற்றி பெற்றன.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று டிரினிடாட்டில் நடைபெறுகிறது.
தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் முக்கியமான போட்டி என்பதால் இரண்டு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
டி20 தொடரைத் தொடர்ந்து ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும், டி20 தொடரை இழந்ததால் ஒருநாள் தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் உள்ளன.
இதையும் படிக்க: 4 ஆண்டுகளுக்குப் பிறகு டி20யில் அலெக்ஸ் கேரி..!