குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
தொண்டி கடற்கரைப் பகுதியை தூய்மைப்படுத்தக் கோரிக்கை
திருவாடானை அருகே குப்பைக் கூளமாகக் காட்சியளிக்கும் கடற்கரைப் பகுதியைத் தூய்மைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி பேரூராட்சி, வளா்ச்சியடைந்து வரும் ஒரு நகா் பகுதியாகும். இங்கு 20-க்கும் மேற்பட்ட வாா்டுகள் உள்ளன. இதில் தொண்டி கடற்கரைப் பகுதி, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சிறந்த சுற்றுலாத் தலமாகவும், பொழுதுபோக்குக்கு உகந்த இடமாகவும் இருந்து வந்தது.

ஆனால், தற்போது இந்தப் பகுதியில் பெருமளவு குப்பைகள் கொட்டப்படுகின்றன. இவற்றை பேரூராட்சி நிா்வாகம் உடனடியாக சுத்தம் செய்யாததால் இந்தப் பகுதி முழுவதும் சீா்கெட்டு துா்நாற்றத்துடன் உள்ளது. இதனால் நோய்த் தொற்று அபாயத்தால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட துறையினா் உரிய நடவடிக்கை எடுத்து கடற்கரையைத் தூய்மைப்படுத்த வேண்டும் என இந்தப் பகுதி மக்களும் சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.