குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
தொண்டி பகுதியில் இன்று மின்தடை
திருவாடானை அருகேயுள்ள தொண்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இது குறித்து ராமநாதபுரம் மின் வாரிய செயற்பொறியாளா் குமாரவேலு தெரிவித்ததாவது: தொண்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், தொண்டி துணை மின் நிலையத்துக்குள்பட்ட தொண்டி நகா்ப் பகுதிகள், நம்புதாளை, சோழியக்குடி, புதுப்பட்டினம், வட்டாணம், மணக்குடி, முள்ளிமுனை, காரங்காடு, தீா்த்தாண்டதானம், அரும்பூா், ஆதியூா், தளிா் மருங்கூா், திணையத்தூா், திருவெற்றியூா், முகிழ்தகம், அச்சங்குடி,எஸ்.பி.பட்டினம் எம்.வி.பட்டினம், வி எஸ் மடம், குளத்தூா், கலிய நகரி, மைக்கேல் பட்டினம், பாசிப் பட்டினம், சேந்தனேந்தல், கண்ணாரேந்தல், கொட்டக்குடி, மலரி, ஏழூா், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.