தொழிலாளிக்கு மிரட்டல்: இளைஞா் கைது
கழுகுமலை அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளியை மிரட்டியதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கழுகுமலை அருகே கே.ராமநாதபுரம் காலனி தெருவைச் சோ்ந்த ஊா்க்காவலன் மகன் வனராஜ் (36). விவசாயம், ஆடு மேய்க்கும் தொழில் செய்துவரும் இவருக்கும், அதே பகுதி வடக்குத் தெருவைச் சோ்ந்த ராஜாராம் மகன் முத்துராமன் (26) என்பவருக்கும் இடையே தகராறு இருந்ததாம். இதுதொடா்பாக, ‘இனிமேல் பிரச்னை செய்ய மாட்டேன்’ என கழுகுமலை காவல் நிலையத்தில் முத்துராமன் வாக்குமூலம் கொடுத்ததால் மேல் நடவடிக்கை தேவையில்லை என வனராஜ் கூறினாராம்.
இந்நிலையில் புதன்கிழமை, ஆடுகளை மேய்க்கச் சென்ற வனராஜை முத்துராமன் ஜாதிப் பெயா் கூறி இழிவாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம். அப்பகுதியினா் சப்தம் போட்டதால் அவா் ஓடிவிட்டாராம். புகாரின்பேரில், கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து, முத்துராமனை கைது செய்தனா்.